அதிக சொத்து உள்ள தமிழக அமைச்சர்கள்.. டாப் 10 பட்டியலில் யார்? ஏடிஆர் ரிப்போர்ட்டில் வந்த ரகசியம்
சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிக சொத்துக்களை கொண்டுள்ள டாப் 10 அமைச்சர்களின் விவரங்கள் தெரிய வந்துள்ளது. இதில் அமைச்சர்கள் கேஎன் நேரு, ஐ பெரியசாமி, மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் இல்லாதது ஆச்சரியம் அளித்துள்ளது. தற்போது டாப் 10ல் இருக்கும் அமைச்சர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
ஏடிஆர் என்று சொல்லப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ள அமைச்சர்கள் குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறது. மொத்தமாக 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சர்கள் என்று 643 அமைச்சர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் ஆய்வு நடத்தியது.

அதன்படி தமிழ்நாட்டில் அதிக சொத்துக்களை வைத்துள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் திமுக வென்ற நிலையில், அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களின் சொத்து மதிப்பு, கல்வித் தகுதி, குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அமைச்சரவையில் அதிக சொத்துக்களை வைத்திருப்பது ஆர்.காந்தி.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான இவர் ரூ.47.94 கோடி சொத்து வைத்துள்ளார். இவர் மீது 3 குற்ற வழக்குகள் இருக்கின்றன. அதில் 3ம் தீவிர குற்ற வழக்குகளாக உள்ளன. இவரின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு மட்டும்தான். இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இருக்கிறார். இவரின் பெயரில் ரூ.41.81 கோடி சொத்துக்கள் இருக்கின்றன. அதேபோல் 2 தீவிர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3வது இடத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவர் பெயரில் ரூ.38.89 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. இவர் மீதும் 4 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 4வது இடத்தில் அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார். இவர் பெயரில் ரூ.30.80 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. மொத்தமாக 8 குற்ற வழக்குகள் இருக்கின்றன. அதில் 2 வழக்குகள் தீவிரமானவை.
5வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இவருக்கு ரூ.29.07 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் மீது 22 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் அமைச்சர் எவ வேலு இருக்கிறார். இவரது பெயரில் மட்டும் 23.32 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது 7 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதில் 2 தீவிர குற்ற வழக்குகள்.
7வது இடத்தில் அமைச்சர் சாமிநாதன் இருக்கிறார். இவர் பெயரில் ரூ.21.07 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 2 தீவிர குற்ற வழக்குகளாகும். அதேபோல் 8வது இடத்தில் அமைச்சர் ரகுபதி இருக்கிறார். இவர் பெயரில் ரூ.15.32 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது மொத்தமாக 23 குற்ற வழக்குகள் இருக்கின்றன.
அதேபோல் 9வது இடத்தில் அமைச்சர் முத்துசாமி இருக்கிறார். இவருக்கு ரூ.13.68 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது 9 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 10வது இடத்தில் அமைச்சர் சிவசங்கர் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.13.55 கோடியாகும். இவர் மீது 46 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 7 வழக்குகள் தீவிரமானவை என்று தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சர்களில் 87 சதவிகிதம் பேர் மீது குற்ற வழக்குகளும், அதில் 45 சதவிகிதம் பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. மேலும் இந்தியாவிலேயே அதிக சொத்துக்களை வைத்துள்ள அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் பெம்மாசானி இருக்கிறார். இவருக்கு ரூ.5,705 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications