நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு?
இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை: இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணம் குறித்தும், அதில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். மேலும் தொழில் துறைக்கான ஒப்பந்தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒப்புதல் தொடர்பாகவும் இதில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கவும் இதில் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆலோசிக்க இருக்கிறார்கள்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications