சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தீவிரமடைகிறது லாக்டவுன்.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.. 5 முக்கிய தீர்மானங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் உள்ளது. கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த லாக்டவுனை அறிவித்தார்.

லாக்டவுன் அமலில் இருந்தாலும் மக்கள் பலர் வெளியே செல்வதும், லாக்டவுனை மதிக்காமல் சுற்றுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முதல்வரின் இந்த அறிவுரையை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன.

ஆலோசனை

ஆலோசனை

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும், கடுமையாக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆலோசனை வழங்கின. இதையடுத்து ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5 தீர்மானம்

5 தீர்மானம்

மொத்தமாக 5 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1 - தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கும்.

தீர்மானம் 2 - அனைத்து விதமான கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்தப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டங்கள் நிறுத்தப்படும்.

உத்தரவு

உத்தரவு

தீர்மானம் 3 - மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கள அளவில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து செயல்படும்

தீர்மானம் 4 - சட்டசமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு

தீர்மானம் 5 - ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

English summary
Tamilnadu parties decide to go for very strict lockdown rules in the All-Party meet held by CM MK Stalin today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X