டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்
சென்னை: டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பகீர் தகவலை வாக்குமூலமாக வெளியிட்டார்.
டப்ஸ்மாஷ் என்ற ஆப் ஒன்று பிரபலம் ஆனது. அதில் வரும் சினிமா பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாயசைத்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் இவை சம்பந்தப்பட்டவரின் செல்போனில் மட்டுமே இருக்கும்.
அவராக பார்த்து யாருக்காவது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்வார்டு செய்தால் உண்டு. ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள டிக் டாக் செயலியில் உலகம் முழுக்க பார்க்கும் படி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆபாச ஆடை
இதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் என மிகவும் ஆபாசமாக ஆடை அணிந்து கொண்டு செக்ஸியாக நடனம் ஆடுகின்றனர். இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இதை அனைவரும் பார்க்கின்றனர்.

பரபரப்பு தகவல்
இது போன்ற பெண்களை குறி வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி நிறுவன ஊழியர்களை குறிவைத்தும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).

குண்டர் சட்டம்
இவர் மீது சென்னை முழுவதும் 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் தப்ப முயன்ற பூங்கா வெங்கடேசனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டிக் டாக் செயலி
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் பாலியல் தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை பயன்படுத்தலாம் என நினைத்த போதுதான் டிக் டாக் செயலி நினைவுக்கு வந்தது. இதில் பல பெண்கள் வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

சாட்டிங்
அவர்களுள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமாக நடனமாடி பெண்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுள் யாருக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது என்பதை வைத்து அவர்களிடம் சாட்டிங்கில் நட்பாக பேசுவோம்.

தொழில் நடத்த
பின்னர் அவர்களிடம் நைஸாக பேசி பாலியல் தொழிலுக்குள் கொண்டு வருவோம். அதோடு இந்த வீடியோக்களுக்கு மயங்கி ஆபாசமாக கமெண்ட் போடும் ஆண்களையும் விடாமல் சாட் செய்து அவர்களை அந்த பெண்களுடன் உறவு கொள்ள வைப்போம். இப்படித்தான் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications