சென்னை உட்பட தமிழகம் முழுக்க.. கொரோனா சிகிச்சைக்கு எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன? அசத்தல் ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக கூடுதல் படுக்கை வசதிகளை அதிகரிக்க தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் சம்மதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை, stopcorona என்ற வெப்சைட்டில், பதிவேற்றம் செய்வது கட்டாயம் என தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், நடிகர் வரதராஜன் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த, தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார்.

மருத்துவமனை பொறுப்பு அதிகாரி

மருத்துவமனை பொறுப்பு அதிகாரி

இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பல்வேறு முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், உடனடியாக தங்கள் மருத்துவமனைக்காக ஒரு பொறுப்பு அலுவலரை (நோடல் ஆபீசர்) நியமிக்க வேண்டும்.

உடனுக்குடன் பதிவேற்றம்

உடனுக்குடன் பதிவேற்றம்

பொறுப்பு அதிகாரி, அரசு உருவாக்கியுள்ள, https://stopcorona.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக, மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கைகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வப்போது பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களுக்கு தெளிவு

மக்களுக்கு தெளிவு

இதன் மூலம் பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அமையும். பொதுமக்கள் அச்சத்தைப் போக்கி, அரசும், தனியாரும் வெளிப்படைத்தன்மையுடன், மருத்துவமனை விவரங்களை இணையதளத்தில் ஏற்ற வேண்டும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதி

தனியார் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை, தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+