தமிழகத்தில் மழை வருது.. அதைவிடுங்க.. நாளை கடைசி நாள்.. சென்னை வெயிலுக்கு குட்பை.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: ஜூன் மாதத்திலேயே இன்றுதான் சென்னையில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அக்னி நட்சத்திரம் போய்விட்டது.. ஆனாலும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.. எனினும் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழிய துவங்கிவிட்டது.

வானிலை: இதனிடையே வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஜூன் 18ம் தேதி 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது..
அதன்படியே, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறையில் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.. ஆனால், அதற்குள் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ட்வீட் ஒன்றினை பதிவிட்டு, இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவித்தார்..
வெப்பநிலை: இதுகுறித்து அவர் இன்று காலை பதிவிட்டிருந்த ட்வீட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இன்று வெப்பநிலை 41 முதல் 42 டிகிரி செல்சியஸாக இருக்கும்.. இதனால் காலை 11 முதல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்.. கடைசி 2 நாட்களுக்கு வெயில் பயங்கரமாக இருக்கும், ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வறண்ட ஜூன் மாதத்தில் இயற்கை நமக்கு ஏராளமான மழையை கொடுக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
Meena 40.8 C at 2.30 pm. Over soodu la, automated computer ku, sweat rain alert pola. It's sizzling outside. Historic June heat. https://t.co/csQWku4wYR
— Tamil Nadu Weatherman (@praddy06) June 16, 2023
இந்நிலையில், இன்னொரு ட்வீட்டினை பதிவிட்டுள்ளார்.. அதில், இன்று பதிவான வெப்ப அளவை தெரிவித்திருந்தார்.. குறிப்பாக, மீனம்பாக்கத்தில் மதியம், 2.30 மணிக்கு 40.8 C பதிவானதாகவும், இந்த ஜுன் மாதத்திலேயே இதுதான் அதிக வெப்பம் என்றும் என்றும் கூறியிருந்தார்..
One more day of heat wave remains and then it is goodbye for the record breaking 40 C days seen in Chennai.
— Tamil Nadu Weatherman (@praddy06) June 16, 2023
கடைசி நாள்: இப்போது இன்னொரு ட்வீட்னை பதிவிட்டு, இன்னும் ஒருநாள் தான் இருக்கிறது.. அந்த ரெக்கார்ட் பிரேக் வைக்கும் வெயிலை மட்டும் கடந்துவிட்டால், இனி மெல்ல வெப்பம் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ட்விட்டர்வாசிகளும், இன்னும் ஒருநாள் இருக்கே.. எப்படியாவது கடந்துவிடணுமே? என்று பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications