நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம்
நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.11) கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த தாழ்வு பகுதி வேகமாக வலுப்பெற்று வருகிறது. வங்கக்கடலில் உருவாகி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலைதான் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

தாழ்வு பகுதி
தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த தாழ்வு பகுதி விரைவில் வடதமிழ்நாடு கடலோர பகுதிகளை அடையும். அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின் கரையை கடக்கும்.

தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை (நவ.11) ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் கடலூருக்கு இடையே மாலை நேரத்தில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இது புயலாக மாற வாய்ப்புகள் இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான போதிய அவகாசம் இல்லை.

புயல்
எனவே புயலாக மாறாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இது கரையை கடக்கும். கடலூர் அருகே கரையை கடப்பதால் கடலூர் தொடங்கி சென்னை வரை உள்ள பெல்ட் முழுவதும் தீவிர மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மையம் வடமேற்கு நோக்கி நகர்வதால் இன்றில் இருந்து டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும்.

கடலூர்
மாறாக கடலூர் முதல் சென்னை வரை வட தமிழ்நாடு முழுக்க தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். சென்னையில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மாலை வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஏற்கனவே மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால் வங்கக்கடல் பகுதி முழுக்க கொந்தளிப்பாக காணப்படும். காற்றின் வேகம் 60 கிமீக்கும் அதிகமாக இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications