படகு சவாரி செய்து வீடியோ ஷூட் எடுத்தது ஏன்? பாஜக அண்ணாமலை கொடுத்த வைரல் விளக்கம்
சென்னை: சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது படகில் சென்று வீடியோ ஷூட் எடுத்தது ஏன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
சென்னையிலும் முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அண்ணாமலை போட்டில் ஆய்வு செய்தார். தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில் படகில் சென்று இவர் பார்வையிட்டார்.

வீடியோ வைரல்
இதில் அண்ணாமலை வீடியோ சூட் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது படகில் அமர்ந்தபடி எப்படி வீடியோ எடுக்கலாம் என்று ஆலோசித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. எப்படி வீடியோ எடுக்க வேண்டும், எப்படி ஃபிரேம் வைக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் பாஜகவினர் ஆலோசனை செய்யும் காட்சிகள் இதில் இடம்பெற்று இருந்தன. திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏன்?
இந்த நிலையில் இப்படி வீடியோ ஷூட் எடுத்தது ஏன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில், மீடியா நண்பர்கள் நேரில் மக்களிடம் சென்று கேளுங்கள். கொளத்தூர் தொகுதியில் சென்று மக்களிடம் உண்மையை கேளுக்குள். மக்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்களா என்று கேளுங்கள். எல்லோரின் வீட்டிற்கும் பால் வருகிறதா, பிரெட் வருகிறதா என்று ரிப்போர்ட் பண்ணுங்கள்.

மீடியா நண்பர்கள்
மீடியா நண்பர்கள் இதை செய்யுங்கள். நீங்கள் செய்ய தவறியதைதான் நான் செய்கிறேன். கொளத்தூரில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று நீங்கள் காட்டவில்லை. அங்கு எவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பதை நீங்கள் ரிப்போர்ட் செய்யவில்லை.

தண்ணீர் நிலவரம்
நீங்கள் தண்ணீர் இருப்பதை காட்டாத காரணத்தால் அந்த வேலையை நான் செய்ய வேண்டியதாகிவிட்டது. அங்கு தேங்கி இருக்கும் தண்ணீரை மக்களுக்கு நான் காட்ட வேண்டியதாகிவிட்டது. நீங்கள் உங்களின் வேலையை சரியாக செய்து இருந்தால் அந்த வேலையை நான் ஏன் செய்ய போகிறேன்.

அண்ணாமலை விளக்கம்
எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொளத்தூரில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. எவ்வளவு தேங்கி உள்ளது என்பதை நீங்கள் காட்டுங்களேன்.. நீங்கள் காட்டாத காரணத்தால் நான் போட் எடுத்துக்கொண்டு போய் மக்களிடம் காட்ட வேண்டிய கடமை, கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

போட்டோ ஷூட் நடத்த காரணம்
பத்திரிகையாளர் சந்திப்பு கூட போட்டோ ஷூட்தான். நாங்கள் போட்டோ ஷூட் நடத்த காரணம் மக்களிடம் உண்மையை கொண்டு செல்லத்தான். என்ன அவலம் இருக்கிறது என்பதை மக்களிடம் காட்டத்தான் நாங்கள் போட்டோ ஷூட் , வீடியோ ஷூட் நடத்துகிறோம். இதை எல்லாம் செய்தால் தப்பு எங்கே நடக்கிறது என்று மக்களுக்கு தெரியும் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications