ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை? அண்ணாமலைக்கு ஜோதிமணி கேள்வி!
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தின் போது படகில் பயணம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து விட்டு விட்டு தீவிர கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரமாக மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகள் இதனால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மோட்டார்கள் மூலம் சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தண்ணீர்
ஆனாலும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வெளியேறவில்லை. இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். சென்னையிலும் முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அண்ணாமலை நேற்று ஆய்வு செய்தார். தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில் படகில் சென்று இவர் பார்வையிட்டார்.

அண்ணாமலை
இதில் அண்ணாமலை வீடியோ சூட் செய்ததாக புகார் எழுந்துள்ளது. எப்படி வீடியோ எடுக்க வேண்டும், எப்படி ஃபிரேம் வைக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் பாஜகவினர் ஆலோசனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைரல்
மழை நேரத்தில் இப்படி வீடியோ சூட் எடுப்பது விளம்பரம் தேட என்று இணையத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலை இருக்கும் இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
|
வீடியோ
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் மூத்த எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். வீடியோ சூட் எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார். அதில், மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?!

கண்டனம்
அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது. பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன், என்று அண்ணாமலைக்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை படகில் பயணிக்கும் வீடியோவை இதில் ஜோதிமணி இணைத்துள்ளார்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications