இன்று உருவாகிறது 3வது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. எங்கெல்லாம் மழை பெய்யும்? எங்கே கரையை கடக்கும்?
சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களாக தமிழ்நாடு முழுக்க சின்ன சின்ன பிரேக் எடுத்து கனமழை பெய்து வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டை புயல் தாக்கவில்லை என்றாலும் கூட இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கிவிட்டன. இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ரெக்கார்ட் மழை பெய்தது.

மழை
முக்கியமாக சென்னையிலும், வட மாவட்டங்களிலும், பல்வேறு டெல்டா மாவட்டங்களிலும் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது மழை பெய்தது. இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. அதன்பின் இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த போது சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்தது.

அடுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இலங்கை அருகே கடல் பகுதியில் இது உருவாகும்.

டெல்டா
அதன்பின் மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து தமிழ்நாடு கடல் பகுதியை அடையும். டெல்டா மாவட்டங்கள் அருகே வந்து பின் வடமாவட்டங்களுக்கு அருகே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது உறுதியாக எங்கே கரையை கடக்கும் என்று இன்னும் கணிக்கப்படவில்லை. இதனால் இன்று டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்கள்
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் இங்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்று
தென் மாவட்டங்களிலும், டெல்டா அருகே உள்ள கடலோர பகுதிகளிலும் இன்று காற்று பலமாக வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது. சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications