தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து உள்ளது. இன்று புதுச்சேரி அருகே காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளது.

சென்னை வெள்ளம்
கனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 100 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. ஆவடி, அடையாறு, தி நகர் போன்ற பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ரெட் அலர்ட்
மழை இன்னும் விடாத நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு, கடலுார், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கோவை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் விடுமுறை
கன்னியாகுமரியில் இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்தது. இதையடுத்து அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழையை பொறுத்து கூடுதலாக இன்னும் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications