சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களுக்கு இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
Recommended Video
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கரையை கடக்கிறது.
அதிகபட்சம் புதுச்சேரிக்கு அருகே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்து வருகிறது
இதன் காரணமாக இரவு முழுக்க வடதமிழ்நாட்டில் தீவிர மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வடதமிழ்நாட்டில் தொடங்கிய கனமழை இப்போது வரை விடாமல் பெய்து வருகிறது. விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மழை விட்ட நிலையில் கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இன்று இந்த மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்ய கூடும்.

கனமழை
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடி, வில்லிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று
இதில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். பகல் நேரத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை ஒட்டிய பகுதிகளில் கடல் பகுதிகளில் அலை சீற்றமாக இருக்கும். இதனால் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications