இங்கும் அங்கும் போக்கு காட்டிய தாழ்வு மண்டலம்.. இப்போது எங்கு இருக்கிறது? எப்போது கரையை கடக்கும்?
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வலிமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது நேரம் செல்ல செல்ல வலிமை பெற்றது.
நேற்று அதிகாலை இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதையடுத்து நேற்று பின்னிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

புயல்
இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புகள் இல்லை. அதற்கான போதிய அவகாசம் இல்லை. இதனால் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவே இது கரையை கடக்க உள்ளது. முதலில் காரைக்கால் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலம் லேசாக திசை மாறியது.

திசை மாறியது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வலுப்பெற லேசாக திசை மாறி வந்தது. இதன் காரணமாக மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரை கடக்கும் வகையில் திசைமாறியது. ஆனால் அதன்பின்பும் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியது. இங்கும் அங்கு போக்கு காட்டிய தாழ்வு மண்டலம் தற்போது காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரிக்கு மிக அருகில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 170 கிமீ தொலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கிறது. அதேபோல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 170 கிமீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைபெற்றுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.

வட தமிழ்நாடு
அதுவரை கனமழை தீவிரமாக பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது 60 கிமீ வேகம் வரை காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாட்டை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி உள்ளது. இன்று மாலை தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் 3 மணி நேரங்களுக்கு முன் மழை தீவிரம் எடுக்கும். அதன்பின் கரையை கடந்த பின் சில மணி நேரங்கள் மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

கனமழை
சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வில்லிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications