அதிர்ச்சியில் பொதுமக்கள்! ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்ட்ரைக்!அரசு முக்கிய ஆக்ஷன்
சென்னை: தமிழக அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகளவில் நிதி செலவானதால் அரசு ஊழியர்களுக்குக் கடந்த 2020இல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கிய பின்னர், 2021இல் மத்திய அரசு தனது தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது.

அகவிலைப்படி
அதைத் தொடர்ந்து மீண்டும் ஜூலை மாதம் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 17% -ல் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.

ரேஷன் கடை ஊழியர்கள்
இருப்பினும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படியை வழங்கவில்லை. இதனால் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட நாட்களாக எந்த ஊதிய உயர்வையும் பெறாமல் பணியாற்றி வருவதாகவும் அரசு ஊழியர்களை போல தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும் ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

போராட்டம்
இருப்பினும், அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இது குறித்துக் கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். அகவிலைப்படியை அரசு உடனடியாக உயர்த்தவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று ரேஷன் ஊழியர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று (ஜூன் 7) தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

சம்பள பிடித்தம்
இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. NO Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தைப் பிடிக்க மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications