மாத சம்பளதாரர்களே இந்த நாட்களில் கொஞ்சம் அலார்ட்டாகவே இருங்க.. கதறவிடும் ஏடிஎம்கள்!
சென்னை : இப்பவே ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். இந்த சூழலில் மார்ச் மாதம் 11 முதல் 13 ம் தேதி வரைமூன்று நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளார்கள். இதன் காரணமாக மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதுடன் அந்த வாரம் முழுவதுமே மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவுகளோ அல்லது திங்கள் கிழமையோ காலையோ பல ஏடிஎம்களில் பணத்தை பார்ப்பது கடினமாக உள்ளது. பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்கள், கிராமங்களில் கூட வார இறுதி நாட்களில் ஏடிஎம்களில் பணத்தை பார்ப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது.
டிமானிஸ்டேசனுக்கு பிறகு அதுதாங்க 500 , 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் போனதாக அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை போல, எங்கே ஏடிஎம்களை பார்த்தாலும் மக்கள் மொத்தமாக உருவி விடுகிறார்கள். மாத தொடக்கத்தில் பணத்தை எடுப்பது என்பது மிக பரிதாபகரமான நிலையாக மாத சம்பளதாரர்களுக்கு உள்ளது.
Recommended Video

மாத சம்பளதாரர்களே
இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏடிஎம்களில் 2000 மட்டுமே உள்ளது அல்லது 500 ரூபாய் தாள் மட்டுமே உள்ளது ரூ.100 தாள்கள் இல்லை என்ற சிக்கலும் ஏஎடிம்களில் வருகிறது. இன்னொரு புறம் 8000 தான் மாத சம்பளம் வாங்கியிருப்பார். அவர் 8 ஆயிரத்தையும் ஆசையுடன் ஏடிஎம்களில் உருவ சென்றால்,4 2000 தாள்களை வலிய திணித்து சில்லறைக்காக அலையவைத்து விடுகிறது ஏடிஎம்கள்.

குறைந்த பட்ச இருப்பு
இந்த லட்சணத்தில் சொந்த பணத்தை ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் காசு . அடுத்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் என சொந்த பணத்தை எடுக்கவே வங்கிகள் வசூலிக்கின்றன. இது ஒருபுறம் எனில் காசு இல்லாமல் கஷ்டப்படுபவன் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கும் கட்டணம் வசூலிக்கின்றன.

தொடர்ந்து விடுமுறை
கஷ்டம் தான்.. மிக கடினமாகவே வார இறுதி நாட்கள் ஒடுகிறது. இந்த சூழலில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை காரணமாக மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த மூன்று நாட்கள் முறையே செவ்வாய், புதன், வியாழன், என வருகிறது. வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை என்றாலும் அடுத்ததாக சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறையாகும். எனவே அன்று வங்கிகள் இயங்காது. இதேபோல் அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அன்றும் வங்கிகள் சேவை பாதிக்கப்படும்.

பணம் எடுப்பது கடினம்
எனவே அந்த வாரம் முழுவதுமே வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அத்துடன் ஏடிஎம்களில் பணம் எடுப்பதிலும் பிரச்சனைகள் வரலாம். எனவே மக்கள் அலார்ட்டாக இருந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் பணம் எடுப்பது திண்டாட்டம் ஆகிவிடும். வங்கிகள் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு பிரச்சனை வாராமல் சரி செய்தால் மக்களுக்கு வங்கி சேவை சுகமாக இருக்கும். ஆனால் சரி செய்ய தாமதித்தால் அது பெரும் சுமையாகிவிடும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications