கிளீன் போல்ட்.. மொத்தமாக சென்னையை கைப்பற்றும் திமுக?.. 16 தொகுதியிலும் முன்னிலை.. அதிமுக கலக்கம்
சென்னை: சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் அதிமுக எதிர்பார்த்ததை விட பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
133 இடங்களில் இதுவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

எப்படி
இதில் சென்னையில் மொத்தமாக திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்தான் முன்னிலை வகித்து வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் அதிக இடங்களில் திமுகதான் வென்றது.

கணிப்பு
இந்த முறை மொத்தமாக 16 தொகுதிகளில் திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது. சென்னையில் உள்ள அண்ணா நகர், சேப்பாக்கம் , ஆர். கே நகர், எக்மோர், துறைமுகம், கொளத்தூர், மைலாப்பூரில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

கணிசமான வாக்குகள்
அதேபோல் பெரம்பூர், ராயபுரம், சைதாப்பேட்டை, திருவிக நகர், ஆயிரம் விளக்கு, தி நகர், வேளச்சேரி, வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் திமுக சென்னையை க்ளீன் ஸ்வீப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை
முக்கியமாக சென்னையில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டாக்டர் எழிலன் என்று முக்கிய வேட்பாளர்கள் எல்லோரும் லீடிங்கில் இருக்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதே சமயம் இது தொடக்க கட்ட நிலவரம்தான் என்பதால் போக போக சென்னையில் அதிமுக முன்னிலை பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications