தந்தி எக்சிட் போல்.. திருவொற்றியூரில் சீமானுக்கு தோல்வி முகம்.. திமுக சங்கருக்கு வெற்றி வாய்ப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் வரும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எல்லாம் திமுக கூட்டணியே பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தந்தி டிவியும் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தொகுதி வாரியாக கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.
இங்கு அதிமுக சார்பாக கே குப்பன் போட்டியிட்டார். திமுக சார்பாக கே.பி சங்கர் போட்டியிட்டார். இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு திமுகதான் வெற்றிபெறும், நாம் தமிழர் சீமான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று தந்தி டிவி கணிப்பு தெரிவிக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications