"அலர்ட்".. சென்னை வெளிவட்ட சாலையில் 4 இடங்களில் " டோல் கட்டணம்" உயர்த்திய தமிழக அரசு.. எவ்ளோ தெரியுமா
மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச் சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
சென்னை: மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச் சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. அதன்படி, வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்னமுல்லைவாயல் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 60 கிலோமீட்டர் தூர வெளிவட்ட சாலையானது ரூபாய் 2,156 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டுள்ளது.. இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜனவரி மாதம் முதல் இந்த சாலையில் 5 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது..

கட்டணம் உயர்வு
இந்நிலையில் இப்போது, இந்த சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.. இதன்படி வரதராஜபுரம், கோலப்பன் சேரி, பாலவேடு சின்ன முல்லை வாயில் ஆகிய சுங்க சாவடியில் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது... அதாவது, வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 50 ரூபாய் முதல் 323 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 2923 ரூபாய் முதல் 18,890 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோலப்பன் சேரி
அதேபோல, கோலப்பன் சேரி சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 21 ரூபாய் முதல் 115 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1225 ரூபாய் முதல் 7913 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... மேலும், பாலவேடு சங்கச்சாவடியில் முதல் சென்று வர 27 ரூபாய் முதல் 173 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1577 ரூபாய் முதல் 10,192 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 18 ரூபாய் முதல் 119 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1080 ரூபாய் முதல் 6976 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

ஜூலை 5 முதல்
இந்த கட்டண உயர்வானது வரும் ஜூலை 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.. 3 சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை என தினசரி கட்டணத்தில் சராசரியாக ரூ. 5 லிருந்து ரூ.22 வரை உயர்த்தியுள்ளது. அதேபோல மாதாந்திர கட்டணத்தில் ரூ.194லிருந்து ரூ. 1,250 வரை உயர்த்தியுள்ளது.. அதுமட்டுமல்ல, 31.03.2023 வரை இது அமலில் இருக்கும் என்றும் அறிவிவிக்கப்பட்டுள்ளது.. வழக்கமாக, ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.

2வது முறை
ஆனால் இந்த ஆண்டு இது இரண்டாவது முறையாக அதாவது, வண்டலூரை மீஞ்சூருடன் இணைக்கும் 60 கிமீ நீளமான, வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, நெம்மேலிச்சேரி மற்றும் சின்னமுல்லைவாயல் ஆகிய இடங்களுக்கு கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.2023ம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் சுங்க கட்டணம் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், இதில், கட்டணம் 5% - 10% உயர்த்தவோ அல்லது சிலவற்றிற்கு மட்டும் குறைக்கப்படவோ வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..
Recommended Video

மாற்றியமைப்பு
இதுகுறித்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் பொதுமேலாளர் சொல்லும்போது, "இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே அதாவது, ஏப்ரல் 1ம் தேதியே இந்த மாற்றங்கள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால், இந்த நான்கு இடங்களிலும், கடந்த ஜனவரி 5-ம் தேதிதான் சுங்கவரி வசூல் தொடங்கியது... விதிகளின்படி, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை 6 மாதங்களுக்குள் மாற்றியமைக்க முடியாது. அதனால், திருத்தப்பட்ட கட்டண விகிதங்களை இப்போது அறிவித்துள்ளோம்.. ஆனால், அடுத்த ஆண்டு முதல், இந்த திருத்தம் ஏப்ரல் 1ம் தேதியே மேற்கொள்ளப்படும்" என்றார்
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications