வானிலை ரிப்போர்ட்.. தமிழ்நாட்டில் இந்த 2 மாவட்டங்களில் மழை பிச்சு எடுக்கும்.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.
சென்னை, உள் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

மழை
அதேபோல் கர்நாடகாவிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிர மழை பெய்தது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு மழை காரணமாக அதிகரித்தது. கடைமடை வரை காவிரியில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாலாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற ஆறுகளிலும் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

காவிரி
இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.

இன்று வானிலை
பெங்களூரில் கனமழையால் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டது. கர்நாடகாவில் பல்வேறு சாலைகள் இந்த வெள்ளம் காரணமாக கடுமையாக நீரில் மூழ்கின. அப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில்தான் இன்று து கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காவிரியில் மேலும் நீர் வரத்து அதிகம் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை
தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலும் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. கடலில் காற்று குறைவாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications