சென்னையில் பரவலாக மழை.. 2 நாட்கள் கன மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்த நிலையில், சென்னையில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக இந்த மழை பெய்வதாகவும், குறைந்த காற்றழுத்தம் அல்லது புயல் இதற்கு காரணம் இல்லை என்றும் பிரதீப் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பிரதீப் கூறியுள்ள தகவல்கள் இவைதான்:

டெல்டா மாவட்டங்கள்
இன்று மாலை முதலே டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டவற்றில் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த மழை பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பரவக்கூடும்.

உள் மாவட்டங்கள்
முதலில் கடற்கரை பகுதிகளில் ஆரம்பிக்கக்கூடிய மழையானது, படிப்படியாக உள் மாவட்டங்களுக்கும் விரிவடையும். வரும் 6ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும். ஆறாம் தேதி நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மழை
அடுத்தடுத்த தினங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆந்திர மாநிலத்தின் சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் வதந்திகள் பரவுவதை போல, பெருமழையா என்பது பற்றி இப்போதே கணிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

புறநகர்களில் மழை
இந்த நிலையில் இன்று மாலைக்கு மேல் புறநகர்களில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம், பள்ளி முடிந்து வீடு திரும்பியோர் சற்றே பாதிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுக்க
இந்த மழையின் தாக்கம் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் எதிரொலிக்கக் கூடும். எனவே அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுக்கவே பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். பிபிசியின் வானிலை பிரிவும், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications