இன்னும் 17 நாட்கள்தான் இருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வானிலை அப்டேட்.. சாத்தியமா?
சென்னை: சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை அப்டேட் தொடர்பாக ட்விட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்துள்ளது. தினமும் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக படிப்படியாக மழை குறைந்து தற்போது பல மாவட்டங்களில் வெயில் அடித்து வருகிறது. ஆனாலும் ஆங்காங்கே சில இடங்களில் அதிகாலையிலும், இரவு நேரத்திலும் மழை பெய்து வருகிறது.

சென்னை
சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் இது தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 15ம் தேதி வரை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும். டெல்டா மற்றும் ராமேஸ்வரம் இடையிலான பெல்ட்டில் ஆங்காங்கே 18ம் தேதி காலை வரை மழை பெய்யும்.

மழை அளவு
மற்ற இடங்களில் பெரிய அளவில் மழை இருக்காது. இன்றும், நாளை காலையும் கடலூர் முதல் வேதாரண்யம் வரை உள்ள பெல்ட்டில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரெக்கார்ட்
இன்னொரு போஸ்டில் சென்னையில் பெய்த மழை குறைந்த மழை குறித்து பதிவு செய்துள்ளார். அதில் 2000ல் இருந்து சென்னையில் பெய்த குறைந்த மழை அளவு
2004 - 7 mm
2008 - 18 mm
2021 - 19 mm (13.12.2021 வரை)
2006 - 21 mm
2002 - 30 mm
2018 - 36 mm
2000 - 42 mm
2017 - 66 mm
2003 - 77 mm
2013 - 86 mm
சென்னையின் சராசரி டிசம்பர் மழை அளவு - 177 mm

17 நாட்கள் உள்ளது
சென்னையின் வருடாந்திர மழை அளவு,
2005 - 2566 mm
1996 - 2451 mm
1943 - 2111 mm
2015 - 2095 mm
2021 - 2054 mm (13.12.2021 வரை)
1847 - 2052 mm
1997 - 2035 mm
2015ல் பெய்த மழை அளவை இந்த முறை சென்னை முந்துமா என்று தெரியவில்லை. இன்னும் 17 நாட்கள்தான் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் கடினமாக இருக்கிறது. கொஞ்சம் லக் இருந்தால் அந்த மழை அளவை நாம் பீட் செய்ய முடியும், என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications