அடேங்கப்பா! சென்னையில் எங்கு அதிக வெப்பம் தகித்தது தெரியுமா? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரம் மற்றும் மற்ற பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. அண்ணாநகர் அல்லது வில்லிவாக்கம் பகுதிகளை தவிர சென்னையின் முக்கிய பகுதிகளில் வெப்பநிலை குறைந்திருந்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதம் முதல் தகிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது கத்தரி வெயில் காலம் நடந்து வருகிறது. இது வரும் 28ஆம் தேதி வரை இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

Tamilnadu Weatherman says about Chennai city temperature

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை வெப்பநிலை அதிகரிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெப்பநிலை நேற்றைய தினம் குறைந்து 99 டிகிரி பாரன்ஹீட்டாக மாறியது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில்: சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரியை தாண்டியது வெப்பநிலை. சென்னையின் முக்கிய பகுதிகளில் காலை 11 மணிக்கே கடல் காற்று உள்ளே போக தொடங்கிவிட்டதால் சில இடங்களில் வெப்பம் இல்லாததற்கு அந்த கடல் காற்றுக்கு நன்றி.

ஆனால் அண்ணா நகர் அல்லது வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 40 டிகிரியை தாண்டியது வெப்பநிலை.

சென்னை நகரம்

தரமணி- 36.1
நந்தனம்- 36.7
மாதவரம்- 36.8
நுங்கம்பாக்கம்- 37.1
கிண்டி- 38.7
மீனம்பாக்கம்- 39.4
வில்லிவாக்கம்- 40

சென்னை புறநகர்

பொத்தேரி- 40.7
திரூர்- 41.1
செம்பரம்பாக்கம்- 41.2
வானகரம்- 41.5
தாம்பரம்- 41.8

Tamilnadu Weatherman says about Chennai city temperature

வடதமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. ஆனாலும் நேற்று சில இடங்களில் 40 டிகிரியை விட குறைவாகவே இருந்தது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை சீராகவும் கட்டுக்குள்ளும் இருக்கும். வடதமிழகத்தில் வேலூர் மற்றும் திருத்தணி பகுதி தகித்தது.

தமிழகத்தின் பிற பகுதிகள்

விருதுநகர்- 40
மதுரை விமான நிலையம்- 40.4
பரங்கிப்பேட்டை, கடலூர்- 40.7
கரூர் பரமத்தி, கரூர்- 41
விரிஞ்சிபுரம், வேலூர்- 41
திருத்தணி- 41.5
வேலூர்- 41.6

இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் மற்றொரு ட்வீட்டில் இன்றும் கடல் காற்று முன் கூட்டியே வரும் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னையின் பல பகுதிகளில் வெப்பம் குறையும். ஆனால் சென்னையில் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெப்பம் இருக்கும். அது போல் வேலூர், திருத்தணி, கரூர் பகுதிகளில் இன்று வெப்பம் அதிகரிக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+