200 ஆண்டுகளில்.. ஜூலை மாதத்தில்.. சென்னையில் அதிக மழை பெய்த இரு நாட்கள் இவைதான்.. வெதர்மேன் ட்வீட்
சென்னை: கடந்த 200 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்த இரு தினங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

வெதர்மேன்
இந்த நிலையில் இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் வங்கக் கடலில் ஒடிஸா கடலோரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் ஜூலை 20- 22 ஆம் தேதிக்குள் உருவாகும். இது உருவாகும் வரை சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும் என்றார்.

சென்னை
அது போல் அவர் இன்னொரு டிவீட்டில் சென்னையில் ஜூலை மாதத்தில் அதிக மழை பெய்த இரு நாட்கள் குறித்தும் பிரதீப் ஜான் விவரித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் 200 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் 48 மணி நேரத்தில் சென்னையில் 17, 18 ஆகிய தேதிகளில் அதிக மழை பெய்துள்ளது.

எப்போது அதிக மழை
ஜூலை 17 ஆம் தேதி 60.5 மி.மீ. மழையும், 18 ஆம் தேதி 77.1 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இரு தினங்களில் அதாவது 48 மணி நேரத்தில் 137.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் ஜூலை மாதத்தில் 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்த அளவில் முதலிடத்தில் 1910 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதியாகும். இந்த தேதியில் 116.3 மி.மீ. மழை பெய்துள்ளது.

எந்தெந்த ஆண்டுகளில் மழை
அது போல் 26.07.1981 இல் 105.8 மி.மீ.மழையும், 29.7.2001-இல் 94.6 மி.மீ. மழையும், 10.7.2017-இல் 84 மி.மீ மழையும், 15.7.1995 -இல் 79.2 மி.மீ மழையும், 18.7.2021 -இல் 77.1 மி.மீ மழையும் 25.7.2001-இல் 74.5 மி.மீ மழையும் பெய்துள்ளது என தெரிவித்துள்ளார் வெதர்மேன்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications