சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. இன்னிக்கு மட்டுமில்லே!.. நாளையும் உண்டு. வெதர்மேனின் கூல் செய்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வெப்பச்சலனம் பரந்து விரிந்து காணப்படுவதால் சென்னையில் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது.

ஆனால் மழை வரவில்லை. இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னையில் சாரல் மழை

சென்னையில் சாரல் மழை

சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர், முகப்பேர், அண்ணாநகர், விருகம்பாக்கம், செங்குன்றம், நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

ட்விட்டர் பக்கம்

ட்விட்டர் பக்கம்

இதனால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இத்தனை நாட்களாக கோடை வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் இன்றைய தினம் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

வெப்பச்சலனம்

வெப்பச்சலனம்

அந்த பதிவில் அவர் கூறுகையில் சென்னையில் மழை பெய்தது. அண்ணாநகர் மேற்கில் கனமழை பெய்தது. இந்த மழை சிறிது நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் வெப்பச்சலனம் பரவலாக காணப்படுகிறது.

வைரல்

வைரல்

இதனால் சென்னையில் நாளையும் மழை பெய்யும். அது இன்றைய மழையை விட சிறப்பானதாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அண்ணாநகரில் கார்மேகங்கள் சூழ்ந்து கொண்டு வரும் படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மழை பொழிவு

மழை பொழிவு

அது போல் தமிழ் புத்தாண்டு மழை பொழிவுடன் தொடங்கியதால் இந்த ஆண்டு முழுவதும் வறட்சி நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள். கடந்த வடகிழக்கு பருவமழை நல்ல பலனை கொடுத்த நிலையில் கோடையிலும் இது போன்ற மழை பெய்வது நல்ல அறிகுறியே என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+