சிகப்பு மண்டலம்.. சிகப்பு தக்காளிகள்.. அதிருதே சென்னை.. 4 நாட்களில் நல்ல மழை இருக்காம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று போல் அடுத்த 4 நாட்களில் டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை

    வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் இன்று அதிகாலை முதல் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.

    முகப்பேர், நொளம்பூர், அடையார், மத்திய கைலாஷ், திருவான்மியூர், பெசன்ட் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பல பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    இடி மின்னல்

    இடி மின்னல்

    இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த மழை மக்களின் மனங்களையும் குளிர வைத்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் இடி, மின்னலுடன் கூடிய மழையின் முதல் பேட்ச் தற்போது பெய்துள்ளது.

    மழைக்கு வாய்ப்புண்டு

    மழைக்கு வாய்ப்புண்டு

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்தது. அடுத்தது பெரிய அளவில் மழை பெய்யவுள்ளது. கடல் காற்று வலுவிழந்து வருவதால் அதிக மேகக் கூட்டங்களாக மாற வாய்ப்புள்ளது. இதனால் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.

    ஏப்ரல் மாதம்

    ஏப்ரல் மாதம்

    சென்னையை பொருத்தவரை இன்று குளிர்ச்சியான ஞாயிற்றுக்கிழமையாகும். ஏப்ரல் 9, 26 ஆகிய தேதிகளில் மழை பெய்துள்ளது. இன்று பெய்த மழை போல் இன்னும் 4 நாட்களில் நல்ல மழை வெளுத்து வாங்கும். சென்னையை சுற்றி சிவப்பு தக்காளிகள் உள்ளன. ஏப்ரல் மாதத்தில் இது இரண்டாவது மழையாகும்.

    தவிப்பு

    தவிப்பு

    சென்னையில் தரமணியில் அதிகபட்சமாக 40 மி.மீ மழை பெய்துள்ளது. கோடம்பாக்கத்தில் குறைந்தபட்சமாக 10 மி.மீ மழை பெய்தது. கொரோனா பாதிப்பு வேறு இருப்பதால் இந்த மழையை வரவேற்கவும் முடியாமல் வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல் மக்களில் சிலர் தவித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+