சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈசிஆரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மேகக் கூட்டங்கள்.. பெடலெடுக்க போகும் மழை.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈசிஆரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மேகக் கூட்டங்கள் - வெதர்மேன் - வீடியோ

    சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் செல்வதால் விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பலனை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்துக்கு பலனளிக்கும் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது.

    இந்த மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் வார்னிங்தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் வார்னிங்

    லேசான மழை

    லேசான மழை

    இது உருவாகும் திசையை வைத்துதான் எங்கே செல்கிறது என்பது குறித்து சொல்ல முடியும். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், மணப்பாறையில் தூறல்களும் லேசான மழையும் பெய்து வருகிறது.

    மேகக் கூட்டங்கள்

    மேகக் கூட்டங்கள்

    எனினும் அளவுக்கு அதிகமான மழை பெய்யாது என்பதால் மீட்பு பணிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. புறநகர் பகுதியான ஈசிஆர் சாலையிலிருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து செல்கிறது.

    மறந்துவிடாதீர்

    மறந்துவிடாதீர்

    இதனால் இன்று சென்னையில் மழை விட்டு விட்டு பெய்யக் கூடும். இரவு நேரங்களிலும் அதிகாலை வேளைகளிலும் நல்ல மழை பெய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

    குறைந்தபட்சம்

    குறைந்தபட்சம்

    சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கிண்டியில் 8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman says that Clouds moving towards Chennai from suburbs in ECR. Today will be on and off day for Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X