சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள்.. விட்டு விட்டு மழை பெய்யும்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள் குழுமியிருப்பதால் விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலம் பெய்து ஓய்ந்துவிட்டது. தற்போது தமிழகத்துக்கு மட்டுமேயான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அரபிக் கடல் பகுதியில் கியார் என்ற புயல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் இலங்கையில் உள்ள காற்றழுத்தம் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தமாக மாறும்.

தென் தமிழகம்
பின்னர் அரபிக் கடலில் புயலாக உருவெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் தமிழகம் வரை அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்.

கொடைக்கானல்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் பகுதி, குறிப்பாக கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் மிக கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடதமிழக கடலோர பகுதியில் சென்னை முதல் டெல்டா பகுதிகள் வரை நல்ல மழை பெய்யும்.

திருச்சி வரை
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்யும். மேகக் கூட்டங்கள் தீவிரமடைந்து சென்னையிலிருந்து திருச்சி வரை பரவியிருக்கின்றன.

விட்டு விட்டு மழை பெய்யும்
இதனால் இன்றும் மழை விட்டு விட்டு பெய்யும். ஒன்றை அடுத்து இன்னொன்று என மேகக் கூட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்தம் இன்று மாலை உருவாகும். அது லட்சத்தீவு பகுதிக்கு செல்லும். அங்கு குறைந்த காற்றழுத்தமாகவோ அல்லது புயலாகவோ உருவெடுக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications