வரும் 18-20 ஆம் தேதிக்குள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்னும் நடக்கும்.. வெதர்மேன் வெளியிட்ட Scenarios!
சென்னை: வரும் 18 - ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்கு இந்த இரு விஷயங்கள்தான் நடைபெறும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கடந்த வியானக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் வடசென்னைக்கும் இடையே கரையை கடந்தது.
இது புயலாக மாறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் அந்தமான் அருகே வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த நிலையில் இன்றைய தினம் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது புயலாக மாறுமா என்பதை வானிலை மையம் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே புயலாக மாறாத காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

டெல்டா மாவட்டங்கள்
அது போல் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருவதால் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ட்விட்டர்
ஏற்கெனவே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் புதிய காற்றழுத்தம் எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் வரும் 18 முதல் 20 ஆம் தேதிக்குள் இரு விஷயங்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.

புயலாக
அவற்றில் முதலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும். இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினார், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications