நாளை மழையிருக்காது.. மண்டே லீவு கிடைக்காது.. ஆனாலும் ஸ்கூல் பசங்களுக்கு குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
சென்னை: சென்னை உள்பட வட தமிழகத்திலிருந்து தெற்கு ஆந்திரம் வரை வரும் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை குறைந்தபட்சம் ஒரு நாளாவது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வடதமிழகம்- தெற்கு ஆந்திரம் இடையே வரும் 21 ஆம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்பட வட தமிழகம் அல்லது தெற்கு ஆந்திரா மேல் மேற்கு நோக்கி வீசும் காற்று நிலவுகிறது. இதனால் வரும் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நாள் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

மழை பெய்யும்
மற்ற நாட்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தினருக்கு ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய இன்னொரு பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நிலை கொண்டு குறைந்த காற்றழுத்த பகுதியானது தீவிரமடைய வறண்ட காற்றும் ஈரக்காற்றும் ஒரு இடத்தில் மோதி கொண்டன.

வறண்ட காற்று
அப்போது வறண்ட காற்றே வெற்றி பெற்றது. வறண்ட காற்றுடன் குறைந்த காற்றழுத்தம் கடுமையாக போராடியது. எனினும் தீவிரமடைய முடியவில்லை. எனவே 20-ஆம் தேதி அதிக அளவுக்கு மழை இருக்காது. எனவே 21 ஆம் தேதி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட தமிழக கடலோரத்தில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு குறைந்த காற்றழுத்தம் நிலவும்.

சென்னை உள்பட வடதமிழகம்
இந்த குறைந்த காற்றழுத்தத்தால் சென்னை உள்பட வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு விட்டு விட்டு மேகக் கூட்டங்களை உருவாக்கும். தென் தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். வட தமிழக உள்மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் பகுதிகளில் வரும் 22 அல்லது 23 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழையில்லை
ஞாயிற்றுக்கிழமை மழையில்லை என்பதால் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காது என்பதால் பள்ளி மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். எனினும் நம்பிக்கையை இழக்க வேண்டாம். செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை குறைந்தது ஒரு நாளாவது லீவு கிடைக்கும். ஆனால் லீவு வரலைன்னா என்னை கேட்க கூடாது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications