இன்று செம கனமழை இருக்கு.. எங்கெல்லாம் பெய்யும்.. சென்னை வானிலை மையம் கணிப்பு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று நல்ல கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று நல்ல கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முக்கியமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த வாரம் முழுக்க கண்டிப்பாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. ஆனால் வாரத்தின் தொடக்கத்தில் மழை பெய்யாமல் ஏமாற்றியது.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் லேசான மழை பெய்தது. நேற்றும் பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து இன்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
ஈரோட்டு, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சூறைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
பலத்த இடி மின்னல் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நேற்றே தமிழகத்தில் பல இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தற்போது வெளிமண்டலத்தில் வெப்பச்சலனமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசி வருகிறது. இந்த காற்று காரணமாக தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வேகமாக 40-45 கிமீ வேகத்தில் காற்று அடுத்த சில நாட்களுக்கு வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications