அர்ஜுனோடு சேர்ந்து ரோகினி ஏமாற்றியதால் கோதை எடுத்த முடிவு.. இனி நடப்பது இதுதான்.. வெளியான புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் அர்ஜுன் சொத்தை எழுதி வாங்கியது சரிதான் என்று ராகினி பேச அதை கேட்டு கோதை கோபமடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் சொத்தை எல்லாம் ராகினி பெயருக்கு மாத்தியாச்சு இது கூட உங்களுக்கு புரியலையா என்று கேட்டு ராகினியின் பெயருக்கு மாற்றிய டாக்குமெண்ட் எல்லாவற்றையும் காட்டுகிறார். இதை பார்த்து கோதை அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது நீங்க எல்லோரும் உங்க பையன் புது கம்பெனி வாங்கிய சந்தோஷத்தில் இருந்தீங்க. அதனாலதான் நீங்க இதை கவனிக்கல என்று அர்ஜுன் அதிர்ச்சி கொடுக்கிறார். அதைக் கேட்டதும் கோபமான நடேசன் அர்ஜுனனை அடிக்க போக ராகினி நிறுத்துங்கப்பா என்று நடேசனை பார்த்து திட்டுகிறார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியான கோதையிடம் நீங்க உங்க புருஷனை எப்பவாது விட்டுக் கொடுத்து பேசி இருக்கீங்களா? அதே மாதிரி தான் நானும். என்னால என் புருஷனை விட்டுக் கொடுக்க முடியாது. உங்களால் அவங்க குடும்பத்துல இருந்து ரெண்டு உயிர் போய் இருக்கு. அதனால அவங்க பண்ணுனது சரிதான். இந்த சொத்து மாற்றிய விஷயம் எனக்கு தெரியும் என்று கோபத்தில் ராகினி பேச இதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது கார்த்திக் உன்ன நம்புனதுக்கு இப்படி ஏமாத்திட்டியேடா என்று அர்ஜுனை அடிக்க வர, அர்ஜுன் உன்னால தான் நான் இந்த வீட்டுக்கு வந்தேன். அந்த நன்றிக்காகத்தான் நீ அடிக்கும் போது பேசாமல் இருக்கிகேன். அதுக்காக இப்படி தான் எப்பவும் இருப்பேன்னு நீ கற்பனை பண்ணாத என்று மிரட்டுகிறார்.

அப்போது சரஸ்வதி நீ ஏமாத்தி கையெழுத்து வாங்கி இருக்கே. இது சட்டப்படி செல்லாது என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் நான் ஏற்கனவே கார்த்திக்கிடமும் ஆபீஸில் கையெழுத்து வாங்கும் போது சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியாச்சு. இனி தமிழ் சார் மட்டும் தான். அவரும் சொத்து கேட்டு வரப்போறது கிடையாது. வந்தால் எப்படி சமாளிக்கணும் என்கிறது எனக்கு தெரியும். அதனால இனி நீங்க என்னை இந்த வீட்டை விட்டு போக சொல்லவே முடியாது என்று மிரட்டுகிறார்.
இதற்கு கோதை என்ன நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டல. முதல்ல என் பையனை எங்ககிட்ட இருந்து பிரிச்ச. பிறகு என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்ல. நீ எல்லாம் நல்லா இருக்க மாட்ட நாசமா போயிருவ என்று சாபம் கொடுக்க, அதற்கு ராகினி செய்ற தப்பை எல்லாம் நீங்க செஞ்சுகிட்டு அவர் மேல வீணா பழி போடுறீங்க என்று ராகினி திட்டுகிறார்.
அதற்கு சரஸ்வதி எங்க அத்தை மேல வீணா பழி போடுறவங்க நாக்கு அழுகி போயிரும். ஆனா அதை நீயும் நம்பாதே என்று சொல்ல, அதற்கு ராகினி அவர் ஒன்னும் ஏமாற்றி சொத்த மாத்தல. எல்லாமே என் பேர்லதான மாத்தி இருக்காரு. அவரு என்ன சொன்னாரு தெரியுமா? எங்க அப்பா இருந்த இடத்துல நீ இருக்கணும். எல்லாரையும் நல்லா பாத்துக்கணும்னு சொன்னாரு. இப்ப கூட நாங்க உங்களை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்லல என்று ராகினி சொல்ல அதற்கு நீ போடுற பிச்சையில நாங்க இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
என் பையன் கூட இந்த வீட்டை விட்டு வெளியே போகும்போது இப்படித்தானே வேதனையில் போயிருப்பான். அதை நான் இப்போ அனுபவிக்கிறேன் என்று ஃபீல் பண்ணி பேசியபடி கோதை வீட்டை விட்டு கிளம்ப, அவரோடு எல்லோரும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர். அதைத்தொடர்ந்து எல்லோரும் கோவிலில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது சரஸ்வதி வாங்க அத்தை வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல கோதை சாமி முன்பு நின்று கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
இந்த நிலையில் கோதையின் குடும்பத்தினர் அனைவரும் தமிழில் வீட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் அனைவரும் இனி தமிழ் வீட்டில் தான் ஒன்றாக இருக்கப் போகிறார்கள் என்று தெரியவருகிறது. இனி ராகினிக்கு அர்ஜுன் பற்றிய உண்மைகள் தெரிய வந்தபோது ராகினி என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications