நெல் ஜெயராமனுக்கு அரசு உதவி.. மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி
சென்னை: பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல் ஜெயராமனுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவியாக வழங்கி உதவியுள்ளதற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மு. தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரபல நெல் ஆராய்ச்சியாளர் ' நெல்" ஜெயராமன் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தோழர் P.R. பாண்டியன் போன்ற தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் அவருக்கு துணை நின்று மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று நேற்றைய தினம் தமிழக முதல்வர் மாண்புமிகு.எடப்பாடியார் அவர்களை நானும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களும் சந்தித்து வலியுறுத்தினோம்.
அடுத்த 3 மணி நேரத்தில் அவருக்கு மருத்துவ செலவுக்காக 5 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்.
இது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விவசாயிகளுக்கும் செய்த மரியாதையாக கருதுகிறோம்.
இதற்காக மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications