தமிழச்சியிடம் சொந்தமாக கார் கூட இல்லையாம்.. ஒரே ஒரு டிவிஎஸ் எக்ஸெல் மட்டுமே.. சொத்து விவரம்!
தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தென் சென்னை தொகுதியின் திமுக வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்பதும், ஒரு டூவீலர் மட்டும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னையில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் போன்றோருடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த வேட்பு மனுவில் இணைத்திருந்த பிரமாண பத்திரத்தில் தமிழச்சி தங்கபாண்டியனின் சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் இப்போது வெளிவந்துள்ளது. அதில், மொத்தம் 5 பேங்குகளில் இவருக்கு 9 அக்கவுண்ட்கள் உள்ளன.

கணவர் சந்திரசேகர் பெயரிலும் பல்வேறு வங்கிகளில் ஏராளமான வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து, 43,792 மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.4,72,64,774 ஆகும். கணவரின் பெயரில் இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1,12,20,170 மற்றும் ரூ.1,84,04,855 மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன.
ஆனால் இவர் பெயரிலும் சரி, கணவர் பெயரிலும் சரி, ஒரு கார் கூட இல்லை. தமிழச்சி பெயரில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் டூ வீலர் இருக்கிறது. கணவர் சந்திரசேகர் பெயரில் ஹோண்டா ஆக்டிவா மட்டுமே உள்ளதாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications