ஜூலை 12 வெளியாகும் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை.. புதிய முயற்சிக்கு ஆதரவு கிட்டும் என நம்பிக்கை
சென்னை: ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தனது தமிழாற்றுப்படை நூல் வெளியிடப்படும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழாற்றுப்படை நூலை திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராசர் அரங்கத்தில் வெளியிட உள்ளார்.
தமிழாற்றுப்படை நூலின் முதல் பிரதியை முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பெற்று கொள்வார் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் தமிழாற்றுப்படை குறித்த ஒலிநூலை வைகோ வெளியிடவுள்ளதாகவும் கூறினார். தான் எழுதிய 17 நூல்களை கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ளதாக வைரமுத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் பேசிய அவர் எந்த கலைஞனையும் விட ஒரு படைப்பாளனுக்கும், எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் தான் ஊடகங்கள் மிக மிக நெருக்கமாக இருப்பதாக கூறினார். ஒரு படைப்பு என்பது ஒரு காலத்தில் பனை ஓலை, பட்டையம் உள்ளிட்டவற்றில் எழுதப்பட்டது. பின்னாளில் காகிதத்தில் எழுதப்பட்டது,
எந்த ஒரு படைப்பும் புது ஊடகங்களுக்கு வரும் போது தான் அது பொதுவுடமையாகிறது. எங்கள் முன்னோர்கள் எங்களை விட பெரும் அறிவுடையவர்களாக திகழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிட்டாத பெருமை, ஊடகங்கள் மூலமாக, இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.
மேலும் பேசிய வைரமுத்து தனது தமிழாற்றுப்படை நூலானது ஒரே நேரத்தில் விழிகளுக்கும், செவிகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது 37 படைப்புகளுக்கு கிடைக்காத ஒரு நவீனத்துவம் 38-வது படைப்பான தமிழாற்றுப்படைக்கு, கிட்டியிருப்பதாக கூறினார்.
சுமார் 3 மாதங்கள் செலவழித்து தமிழாற்றுப்படை நூலை தன் குரலாலேயே வாசித்து ஒலிப்பதிவு செய்துள்ளதாக கூறினார். யாருடை குரலாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும் தானே தொடர்ந்து கேட்டால். எனவே தமிழாற்றுப்படை நூல் பக்கங்களை வாசித்துள்ள போதும், கேட்பவர்களுக்கு இடையில் சலிப்பு தட்டாமல் இருக்க மெல்லிசையை தவழ விட்டுள்ளதாக கூறினார்.
இந்த ஒலிநூலானது 12 மணி நேர கால அளவை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த புதிய முயற்சிக்கு தமிழ் உலகம் தமக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக கூறினார் வைரமுத்து.
-
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications