திருமண மண்டபங்கள், ஹால்களுக்கு உயரும் மின் கட்டணம்! தமிழக அரசின் முக்கிய முடிவு? யாருக்கு பொருந்தும்
சென்னை: தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
உங்கள் அல்லது உங்கள் வீட்டு திருமண நிகழ்விற்கு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது வேறு ஏதேனும் சுப நிகழ்வுகளுக்கு ஹால்களை புக் செய்ய முடிவு செய்துள்ளீர்களா? அப்படி என்றால் இனிமேல் அதிக EB பில் கட்ட தயாராகுங்கள்.

TNPDCL ஹால்களுக்கான இபி பில்லை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த ஹால்களில் பெரிய விளக்குகள், அலங்கார விளக்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த கட்டண உயர்வு பொருந்தும். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான இழப்பை தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. 5% கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு நிறைய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் ஆடம்பரமான வெளிச்சத்துடன் செயல்படக்கூடிய பெரிய வணிக நிறுவனங்களுக்கு 5% கூடுதல் கட்டணத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. TNERC இன் கட்டண உத்தரவின்படி, திருமண மண்டபங்கள் மற்றும் மாநாட்டு மையங்களில் அலங்கார விளக்குகளுக்கு தனி சேவை இணைப்பு பெற்று இருக்க வேணும். அப்படி இல்லாவிட்டால் மட்டுமே இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சமீபத்திய ஆய்வின்படி 13,324 நிறுவனங்கள் மண்டபங்கள் இதற்காக ஆய்வு செய்யப்படாமல் உள்ளது. விரைவில் அவை ஆய்வு செய்யப்படும். அதன்பின் கட்டணம் அமலுக்கு வரும்.
மின் இணைப்பு:
தாமதம் மேல் தாமதம்:
ஏற்கனேவே இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இனிமேல் மின்சார வாரியத்திடம் இருந்து மட்டும் மீட்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில் மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இவர்களிடம் மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகள், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கெட்கோ மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து, பிரிவு அலுவலகங்களுக்கு மொத்தமாக அனுப்பியது. இனிமேல் டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மக்களே வாங்க முடியும். ஆனால் இப்போது இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
3 நாட்கள் அவகாசம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி டு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications