Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. மின்சார வாரியம் தந்த திடீர் அறிவிப்பு..இனி பிரச்சனையே தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்சார வாரியம் குட்நியூஸ் ஒன்றை தந்துள்ளது. இதைக்கேட்டு விவசாயிகள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள். என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..
இலவச மின்சார திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40,000 சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வோர் வருடமும் அரசின் அறிவிப்பைப் பொறுத்து இந்த விவசாய இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

Tangedco Major Action and TNERC clarifies Tangedco about the free power over land size

இலவச மின்சாரம்: இந்த விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் வைத்திருக்க வேண்டும்... அப்படி இல்லாதபட்சத்தில், 3 அல்லது 4 பேர் இணைந்துகூட இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இப்படி ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கும்போது, அந்த விண்ணப்பத்தில் அனைவருமே கையெழுத்து போட்டிருக்க வேண்டும். பிறகு, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பதாரர் நில உரிமை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.. பட்டா கண்டிப்பாக தேவை.
இன்னும் பல்வேறு விதிமுறைகள் இந்த திட்டத்தில் உள்ள நிலையில், விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மேற்கொண்டுவருகிறார்.

திருத்தச்சட்டம்: இப்படிப்பட்ட சூழலில் திடீர் சர்ப்ரைஸ் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் 5, 2020-ல், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது.

அதன்படி, விவசாயிகள் இலவச மின்சாரம் பெறவேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் கிணறுகள், போர்வெல்கள் மூலம் தண்ணீரை எடுத்து பம்ப்களை கொண்டு பாய்ச்ச முடியும்.. ஆனால், இந்த திருத்தமானது ஆகஸ்ட் 5, 2020க்கு பிறகு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, அதற்கு முன்பு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பொருந்தாது என்பதே அந்த சட்டதிருத்தமாகும்.
ஒப்புதல்: இதன்காரணமாக, 2020 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்த, கிட்டத்தட்ட 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.. இதற்கான வேண்டுகோளை முன்வைத்தும்கூட, போதுமான நிலம் இல்லாததால், விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தரப்படவுமில்லை.

இந்நிலையில், புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5க்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தால் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது, அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தரவேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மகிழ்ச்சியில் விவசாயிகள்: இதையடுத்து, கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தரும் பணிகள் துரிதமாகி உள்ளன.. இதனால், இலவச மின்சாரத்தை நோக்கி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+