டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இடையில் முக்கியமான ஆபரேஷன் ஒன்றை பாஜக கையில் எடுத்துள்ளதாம். இந்த ஆபரேஷன் தொடர்பாக திமுக, அதிமுகவும் பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறதாம்.
தமிழ்நாட்டில் பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் முதல் கட்டமாக ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்டது.

தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை- நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
அதன்பின் ஒரு வாரம் கழித்து மீதம் உள்ள தொகுதிகளுக்கான பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
திருவள்ளூர் - பாலகணபதி
வட சென்னை - பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் - முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்தராஜன்
கரூர் - செந்தில்நாதன்
சிதம்பரம் - கார்த்தியாயினி
நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சை - எம்.முருகானந்தம்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
மதுரை - ராம சீனிவாசன்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
தென்காசி - ஜான் பாண்டியன்
புதுச்சேரி - நமச்சிவாயம் என்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக பிளான்: இதில்தான் பாஜக முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளதாம். அதன்படி 10 இடங்களில் எப்படியாவது 2ம் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக திட்டமிட்டு உள்ளதாம்.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
திருப்பூர் - முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்தராஜன்
கரூர் - செந்தில்நாதன்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
தென்காசி - ஜான் பாண்டியன்
ஆகிய 10 தொகுதிகளில் எப்படியாவது இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறதாம். அதாவது அதிமுகவை பின்னுக்கு தள்ளி 10 இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும் என்று பாஜக களமிறங்கி உள்ளதாம்.
இந்த 10ல் இரண்டாம் இடம் பிடித்தால் பாஜக தமிழ்நாட்டில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பெறும். முக்கியமாக 12 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறும் என்று பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறதாம்.
இது போக பின்வரும் 4 தொகுதிகளில் பாஜக கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் உறுதியாக வேலை செய்து வருகிறதாம்.
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
நெல்லை- நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
மேலே உள்ள: 10 தொகுதிகள்தான் தேர்தலில் களநிலவரத்தையே மாற்றும். பாஜகவிற்கு புதிய பலத்தை இது கொடுக்கும் என்று பாஜக நம்புகிறதாம். இங்கே பாஜகவை இரண்டாம் இடம் பெறவே விடக்கூடாது என்பதற்காக அதிமுகவும் தீவிரமாக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறதாம்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications