TASMAC: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் பணி புரிந்து வரும் 24 ஆயிரம் ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 01.04.2026 முதல் அமுலுக்கு வரும்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (TASMAC) பணிபுரியும் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திற்கு வைத்ததின் பேரில் அவர்களுடைய கோரிக்கைகளை பரீசிலனை செய்து கீழ்க்கண்டவாறு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
1. கடைப்பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூ.1000/- உயர்த்தி வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 01.04.2026 முதல் அமுலுக்கு வரும். இதன் மூலம் 24,033 கடைப்பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை
2. கடைப்பணியாளர்களுக்கு ESI மருத்துவ மற்றும் சமூகப்பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3. காலிபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அவுட்சோர்சிங் (Out Sourcing முறையிலோ அல்லது காலிபாட்டில்களை சேகரிப்பு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் பணி வழங்க நடவடிக்கை
4. கிடங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் கடைப்பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. தற்காலிக பணிநீக்கம் கடைப்பணியாளர்களுக்கு உள்ள செய்யப்பட்டு வெளியில் குற்றச்சாட்டுகள் தன்மைக்கேற்ப மீண்டும் பணிவழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் (டாஸ்மாக்), பொது மேலாளர் (சில்லறை விநியோகம்), பொது மேலாளர் (நிர்வாகம்), துணைப் பொது மேலாளர் மற்றும் சட்டஅலுவலர் (டாஸ்மாக்) ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை துறைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications