எங்கெங்கும் மப்பு.. ஊரெல்லாம் சியர்ஸ்.. ஏடிஎம் சென்டர்ல.. அலங்கோலமாக படுத்துத் தூங்கிய பெண்!
சென்னையில் பெண் ஒருவர் மதுபோதையில் ஏடிஎம் சென்டரில் படுத்துத் தூங்கிய வீடியோ அதிர்ச்சியை தருகிறது
சென்னை: ஏடிஎம் மையத்திற்குள் குடி போதையில் ஒரு பெண் விழுந்து கிடந்தார்.. ஆடை விலகி, தலை கலைந்து அலங்கோலமாக காணப்பட்ட அவரைப் பார்த்து பணம் எடுக்க வந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். தலையில் அடித்து மனம் நொந்து கொண்டுள்ளனர்..!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ்ரோடு பஸ் ஸ்டேஷண்ட் அருகே ஒரு எஸ்பிஐ ஏடிஎம் பேங்க் உள்ளது. இது முக்கியமான சாலையில் உள்ள பேங்க் என்பதால், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில், இந்த ஏடிஎம் ரூமுக்குள் ஒரு பெண் குப்புற படுத்து கிடந்தார்.. பிங்க் கலர் சேலை அணிந்திருந்தார்.. தலை கலைந்திருந்தது.. ஆடை விலகியிருந்தது.. அவருக்கு 35 வயதிருக்கும்..!

ஏடிஎம்
அந்த ஏடிஎம் தரையிலேயே விழுந்து கிடந்தார்.. அவருக்கு பக்கத்திலேயே பல ஆண்கள் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தனர்... இன்னொரு பக்கம் ஏடிஎம் ரூமின் குப்பை தொட்டி இருந்தது..இதையெல்லாம் பார்த்து முகம் சுளித்தபடியே அங்கிருந்து சிலர் நகர்ந்து சென்றனர்.. இந்த பெண் பாரத்ததும், அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்..

கும்பிட்டார்
முதலில் பார்த்தபோது, ஏதோ உடம்பு சரியில்லாமல் விழுந்து கிடந்ததை போல் தெரிந்தது.. ஆனால், அவரை சிலர் தட்டி எழுப்ப முயன்றபோதுதான், அவர் போதையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது..அவரை தட்டி எழுப்பியபோது, குப்புற படுத்து கிடந்தவர் மல்லாந்து படுத்தார்.. பிறகு, படுத்து கொண்டே அங்கிருந்தவர்களை பார்த்து புன்னகைத்தார்.. பிறகு, எல்லாரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

வீடியோ
ஆனாலும், அங்கிருந்து நகரவில்லை.. போதையும் தெளியவில்லை.. இதனால், பணம் எடுக்க வந்தவர்கள் அந்த பெண்ணை தாண்டி சென்று பணம் எடுக்க முயன்றனர். ஒரு இளைஞர் மட்டும் ஓடிவந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து, பெண்ணின் முகத்தில் ஊற்றினார்.. அப்போது லேசாக போதை தெளிந்தது.. ஆனால், அவர் எழுந்து சென்று, திரும்பவும் அதே ஏடிஎம் வாசலில் குப்புற படுத்து கொண்டார்.. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

குடும்பங்கள்
பொதுவாக, ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருப்பார்கள்.. இந்த ஏடிஎம்மில் அப்படி யாராவது இருக்கிறார்களா? அல்லது இருந்தும், அவரால் இந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியவில்லையா என்று தெரியவில்லை. டாஸ்மாக் வேண்டாம் என்று, மதுக்கடையை திறந்து எங்கள் குடும்பத்தை சீரழிக்காதீங்க என்று எத்தனையோ பெண்கள் டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்திஉள்ளனர்.. பல பெண்களின் ஆவேச போராட்டங்களினால் எத்தனையோ டாஸ்மாக்குகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.. இழுத்து மூடப்பட்டுள்ளன.. வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன..

மதுவிலக்கு?
அப்படி இருக்கும்போது, ஒருசில பெண்கள் இந்த காரியத்தில், அதுவும் லாக்டவுன் சமயத்தில் எல்லைமீறுவது வேதனையாக இருக்கிறது. மது குடிக்க கூடாது என்று தான் நம் நாட்டில் பொத்தாம் பொதுவாக, சொல்லப்படுகிறதே தவிர, (அதுவும் பெயரளவில்தான்) பெண்கள் மது குடிக்கக்கூடாது என்று எங்குமே சொல்லவில்லை.. அப்படி விதிமுறைகளும் எங்கும் இல்லை... ஆனாலும், "மதுவிலக்கு" எப்படியும் வந்துவிடும் என்று நாம்தான் இன்னமும் நம்பி கொண்டிருக்கிறோம்..!












Click it and Unblock the Notifications