டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்.. 200-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட்.. அரசு சொன்ன அந்த ஒரு விஷயம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே பிரச்சனைகள் வலுத்து வருகின்றன.. இந்த நிலையில், சில மாவட்டங்களில் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசின் பதில் என்ன?

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதிய உயர்வு மற்றும் கடை பராமரிப்புக்கான செலவு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TASMAC TASMAC Employees Empty Bottle Return

டாஸ்மாக் - மதுக் கடைகள்

இதையடுத்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் கூடுதல் பணம் வசூலித்ததாக சொல்லப்படும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்கப்பட்டு வருகிறது.. முக்கியமாக இவர்களெல்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள்.. அந்தவகையில் இந்த 2 நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது..

இந்த சஸ்பெண்ட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெறக் கோரியும் சில ஊழியர்கள் கடைகளை மூடி நேற்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடந்தது.

200க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட்

காலி பாட்டில்களை வாங்குவதற்கான செலவு, பணிச்சுமை தங்களுக்கு அதிகமாக இருப்பதாக ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.. குறிப்பாக, கோவில்பட்டியில் காலி பாட்டில்களை ஒரே நேரத்தில் 5 பாட்டில்களாக திரும்ப பெற்றால், அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணியில் இனி டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டிய நிலை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலி பாட்டில்களை ஸ்கேன் செய்து திரும்பப் பெறும் புதிய முறைக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனால் இந்தப் பணியை காரணமாகக் கொண்டு கடைகளை திடீரென மூடி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசு தந்த அதிரடி

இப்படியான பரபரப்புக்கு நடுவில்தான், டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசுக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறி, பணியாளர்களை "கூல்" செய்துள்ளார்.. ஊழியர்களின் பிரச்சனைகளை சரிசெய்ய தமிழக அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும், மது பாட்டில்கள் உடைவதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க ஒரு கடைக்கு 2 பாட்டில்களுக்கான தொகையை வழங்கவும் அரசு தயாராக இருப்பதாகவும் விக்னேஷ் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

எனினும், டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம், கூடுதல் பணம் வசூல் தொடர்பான நடவடிக்கைகள் என பல விவகாரங்கள் மொத்தமாக சேர்ந்து கிளம்பியுள்ளன.. அதனால் அரசு மற்றும் ஊழியர்கள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+