இனி எல்லா சரக்கும் கிடைக்கும்.. மட்டி சரக்குக்கு எண்ட்! டாஸ்மாக் பெரும் மாற்றம்! குடிகாரர்கள் ஹேப்பி
சென்னை: டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு (RV Shops) சரக்கு அனுப்பும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக்கில் சமபங்கீடு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகளின் உண்மையான தேவைக்கேற்பவே சரக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத சரக்கு குறையும், விற்பனை அதிகம் உள்ள பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகள், உள்நாட்டு மதுவகைகள், ஒயின் வகைகள் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாக குடிகாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கடந்த ஆட்சி காலத்தில் 11 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மதுபான வகைகளையும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையி, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்திருக்கும் நிலையில் அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் வாங்கப்பட்டு அனைத்து வகை மதுக்களும் விற்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் டாஸ்மாக் நிர்வாகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு (RV Shops) சரக்கு அனுப்பும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய நடைமுறை 21.09.2026 முதல் இனிமேல் அனைத்து மாவட்ட மேலாளர்களும், சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இண்டெண்ட் (Indent) வழங்கும்போது, அந்தந்த கடைகள் கேட்கும் உண்மையான தேவை / கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
சமபங்கீடு முறை ரத்து: இதற்கு முன்பு 20.07.2026 முதல் அமலில் இருந்த, அனைத்து சப்ளையர்களின் பொருட்களையும் RV கடைகளுக்கு சமமாக பிரித்து வழங்கும் (Equal Apportionment) முறை, 21.09.2026 முதல் முழுமையாக நிறுத்தப்படுகிறது
மூத்த மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நிர்வாக இயக்குநர், டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத சரக்கு குறையும், விற்பனை அதிகம் உள்ள பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
