தீபாவளி விருந்து.. குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டாஸ்மாக்.. என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.'தண்டர்போல்ட் ஸ்டிராங்', 'காட்பாதர்' என்ற இரண்டு வகை பீர் பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்திருக்கிறது.
தமிழகத்தில் மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கடந்த மே மாதம் வரை மொத்தம் 5,329 கடைகள் இயங்கி வந்தன. இதன் மூலம் 2022-2023-ம் ஆண்டில் 44,098.56 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்திருந்தது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், 'தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறிப்பட்டு மூடப்படும்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
அதன்படியே வியாபாரம் குறைவான கடைகள், கோயில், கல்வி நிறுவனங்கள் அருகிலிருக்கும் கடைகள், மக்களின் கோரிக்கையை ஏற்று சில கடைகள் என மொத்தம் 500 கடைகள் மூடப்பட்டன.

இதனால் பெரிய அளவில் வருவாய் பாதிப்பு எதுவும் அரசுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் 2023-24 ஆண்டில் டாஸ்மாக்கின் வருமானம் ரூ.50,000 கோடியாக எதிர்பார்க்கப்படுவதாகவும்.. முந்தைய ஆண்டைவிட ரூ.5,000 கோடி அதிகம் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக்கில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, போன்ற விடுமுறை காலங்களில் வழக்கத்தில் இல்லாத அளவிற்கு மதுவிற்பனை இருக்கும். பொதுவாக 100 கோடிக்கு ஒரு நாள் விற்பனையாகும் என்றால் தீபாவளி சமயத்தில் 200 முதல் 300 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகும் என்கிறார்கள்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அப்போது பலரும் மது அருந்துவார்கள் என்பதால் போதிய மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிமகன்கள் விரும்பும் மதுபானங்கள் அதிகப்படியாக இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தீபாவளியை ஒட்டி, நேற்று முன்தினம் முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். இதேபோல் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.. இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்களுக்கு வந்துள்ளன. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற மாநிலங்களில் உள்ளது போல் கட்டிங் எனப்படும், மினி சரக்கு பாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications