அடித்து ஆடும் அமைச்சர் விக்னேஷ்..டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! இனி ஒன்லி ஆன்லைன் தான்! என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக்கில் மதுபானங்களை கொள்முதல் செய்வதற்கான நடைமுறை மாற்றம். கையடக்க கருவி மூலம் மதுபானம் கொள்முதல் செய்யும் புதிய நடைமுறை வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. காகிதப் படிவங்கள் மூலம் மதுபானம் கொள்முதல் செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது என டாஸ்மாக் கூறியுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களின் சரக்குகளும் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

TASMAC Liquor tn govt

டாஸ்மாக்

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.

மதுபானங்கள்

அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாக குடிகாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக்கில் மதுபானங்களை கொள்முதல் செய்வதற்கான நடைமுறை மாற்றம் செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆன்லைன் கொள்முதல்

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," செப்.10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கான சரக்கு கோரிக்கையை கையடக்கக் கருவி (Handheld Device) மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் தேவையான மதுபானங்களின் அளவு, அந்தக் கடையின் முந்தைய விற்பனை அடிப்படையில் கணினி மூலம் தானாக உருவாக்கப்படும்; முதல் முறையாக மட்டும் மேற்பார்வையாளரின் கோரிக்கை அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும்

மேற்பார்வையாளர்

பிராண்ட் பெயர், பேக் அளவு மற்றும் தேவையான சரக்கு அளவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். தேவையெனில், அதிகபட்சம் 120% வரை அதிகரிக்க முடியும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைக்க முடியாது. நாள் முடியும் வரை சரக்கு கோரிக்கையை சமர்ப்பித்த பின்னரும் அதன் அளவை மேற்பார்வையாளர் மாற்றியமைக்கலாம்;

கையடக்க கருவி

மேற்பார்வையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP சரிபார்ப்புக்குப் பிறகே கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் கையடக்கக் கருவியில் உறுதிப்படுத்தல் பக்கத்தை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம். அச்சு நகலை டெப்போவில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 2வது சரக்கு கோரிக்கையிலிருந்து மாவட்ட மேலாளரின் அனுமதி தேவையில்லை; தானியங்கி முறையில் அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து வகை மற்றும் பிராண்டுகளின் மதுபானங்கள் சமமான அளவில் தேவைப்பட்டியில் இருக்கும். வாடிக்கையாளர்கள் என்னென்ன மதுக்களை விரும்பி கேட்கிறார்கள் என்பது குறித்து இதில் தெரிவிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+