டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.. அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்.. அமைச்சர் துரைமுருகன்
சென்னை: டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது என்றும் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டசபை கடந்த 22 ஆம் தேதி கூடியது. தொடர்ந்து காலை மாலை சட்டசபை நடந்து வந்தது. இன்று சட்டசபையில், காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு தறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதேபோல் கள்ளச்சாராயம் சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் அரங்கேற கூடாது என்பதற்காக மதுவிலக்கு சட்டம், 1937-ல் திருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை என்பதாலும்,
இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசியபோது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று கூறினார். இதுபற்றி துரைமுருகன் பேசியதாவது:-
கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசு மதுவில் கிக் இல்லை. அரசின் மதுபானம் சாப்ட் டிரிங்க் போல அவர்களுக்கு தெரிவதால் கள்ளச்சாராயம் நாடி செல்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications