TASMAC: 1700 டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்.. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அதிரடி..!
இன்று ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன
சென்னை: ஊரக நகர்ப்புற தேர்தல் வாக்கு பதிவினை முன்னிட்டு, 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் மூடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், 1700 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் நிறைய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
ஓட்டுப்பதிவின்போது, அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தது. அதேபோல டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மதுக்கூடம்
"வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.2.2022 காலை 10 மணி முதல் 19.2.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.2.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட வேண்டும்" என்று அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அலைமோதிய கூட்டம்
அதன்படி, கடந்த 17-ந் தேதி முதல் ஓட்டுப்பதிவு நடைபெற்ற 19-ந் தேதி வரை 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டன... தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கடந்த 16-ந் தேதி இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. இதனால் கடந்த 16-ந் தேதியன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதன்மூலம் தினசரி விற்பனையை விட அன்று இரட்டிப்பாக மது விற்பனை நடந்தது.. பிறகு நேற்றுதான், 20-ம்தேதி டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன..

மதுப்பிரியர்கள்
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் டாஸ்மாக்குகளில் அலைமோதினார்கள்.. மது பாட்டில்களையும், சிலர் பெட்டி, பெட்டியாகவும் மதுவை வாங்கி சென்றனர். சிலர் கார்களை எடுத்து கொண்டு வந்து அதில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சென்றனர்.. பல கடைகளில் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. இந்நிலையில், இன்று தினம், ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

ஒருநாள் மட்டும் விடுமுறை
இதையொட்டி, இன்றைய தினம் மதுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன.. மாநிலம் முழுவதும் 268 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் நடக்க உள்ளது.. எனவே, அந்த பகுதிகளில் நேற்று இரவு 10 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டன.. இன்று மீண்டும் மதுக்கடைகள் மூடப்படும் அறிவிப்பு வெளியாகி விட்டதால், மது பிரியர்கள் நீண்ட நேரம் கியூவில் நின்று மதுவை வாங்கி சென்றனர். மாநிலம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சுமார் 1,700 கடைகள் இன்றைய தினம் அடைக்கப்படுகிறது..
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications