ஆன்லைனில் டாஸ்மாக் மது விற்பனை உண்டா..? அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் பதில்
சென்னை: ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படும் எனச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆன்லைனில் மது விற்பனை செய்யும் திட்டம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டில் வரும் செப். 21ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மானிய கோரிக்கை மீதான விவதாகம் நடைபெற்று வருகிறது.

தங்கமணி பேச்சு
இந்நிலையில், இன்று சட்டசபை மானிய கோரிக்கையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகிறது. ஆன்லைன் மது விற்பனை தொடங்கப்படும் போது, மது ஆர்டர் செய்யும் போது நபர் வீட்டில் இல்லாமல் வெளியே சென்றிருந்தால் என்ன ஆகும்?" என்றார்.

ஆன்லைன் மது விற்னை இல்லை
மேலும், அப்போது வீட்டில் இருக்கும் பெண்கள் மதுவை வாங்க நேரிடும் என்று குறிப்பிட்ட அவர், இதனால் அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை பற்றி நினைப்பார்கள் என்றும் இதனால் ஆன்லைன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த மதுவிலக்கு துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை என்பது கொண்டுவரப்பட மாட்டாது என்று கூறினார்.

சம்பள உயர்வு
இது தவிர டாஸ்மாக் குறித்த சில புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் வெளியிட்டார், அதன்படி டாஸ்மாக ஊழியர்களுக்கு வரும் ஏப்ரல் 2021 முதல் கூடுதலாக ரூ 500 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றார். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஆகியவற்றில் ஈடுபட்டு பின்னர் மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்,

மத்துக்கு எதிராக பரப்புரை
மேலும் மாநிலம் முழுவதும் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். இவை தவிரத் தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு போலீஸ் துணை கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications