அண்ணே ஒரு குவாட்டர்.. போதை படையப்பாக்களுக்கு நடுவே நீலாம்பரி.. டாஸ்மாக் ரவுசுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மது வாங்க வரிசை கட்டி நின்ற படையப்பாக்களுக்கு நடுவே நீலாம்பரியாக வந்த ஒரு பெண், அண்ணா ஒரு குவாட்டர் என்று மது வாங்க முண்டியடித்த வீடியோ வைரலாகி வருகிறது

Recommended Video

    June-14 | Wineshop Open Comedy | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் எத்தனை ஆண்கள் மது அருந்தாமல் உள்ளார்கள் என்பதை கணக்கெடுப்பது மிக எளிது.. ஆனால் எத்தனை ஆண்கள் மது அருந்துகிறார்கள் என்பதை சொல்வது மிக கடினம். ஏனெனில் எண்ணிக்கை மிகமிக அதிகம். 18 வயது நிரம்பாத பாலகன்கள் தொடங்கி , 90 வயது முதியவர்கள் வரை பலரும் மது அருந்துகிறார்கள்.

    ஆண்கள் தான் மது அருந்துகிறார்களா, பெண்கள் மது அருந்துவது இல்லையா என்றால், கண்டிப்பாக அப்படி சொல்லிவிட முடியாது. குறிப்பிட்ட சதவீதம் இளம் பெண்களும், வயதான பெண்களும் மது அருந்துகிறார்கள். அன்றாடம் கூலி வேலைசெய்யும் ஆதரவற்ற பெண்கள் மது அருந்தும் காட்சிகளை பார்த்திருப்போம்.

    பாரில் அருந்தலாம்

    பாரில் அருந்தலாம்

    இதேபோல் பப்களிலும் டீசன்டாக வந்து ஜாலியாக பீரையும் ஹாட்டையும் மிக்ஸ் செய்து சாப்பிடும் இளம் பெண்களையும் பார்த்திருப்போம். ஆனால் டாஸ்மாக்பார்களில் பெண்கள் மதுவாங்குவதையோ, அருந்துவதையோ பார்ப்பது அரிதானது. ஆனால் அந்த காட்சிகளையும் பார்கும் அவலமும் விரைவில் வரலாம்,

    பக்தன் வேடம்

    பக்தன் வேடம்

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டன. நாங்க ரொம்ப நல்ல பிள்ளைங்க என முக கவசம் அணிந்து வரிசைகட்டி நின்று போதை படையப்பாக்கள் மது பாட்டிலை வாங்கி கடவுளை பார்த்த பக்தன் போல் கும்பிட்டு குடித்து கும்மி அடித்தனர்.

    குடிமகன்கள் ஷாக்

    குடிமகன்கள் ஷாக்

    அப்போது நீங்க மட்டும் தான் டாஸ்மாக் வருவீங்களா நாங்களும் வருவோம் என்பதுபோல இளம்பெண் ஒருவர் தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு வரிசையில் நிற்க அன்னை ஒரு குவாட்டர் குடுங்க எனக் கேட்டு வாங்கிச் சென்றார். அதை பார்த்து வாயடைத்து போன குடிமகன்கள் என்ன கொடுமையா இது என்று முணுமுணுத்தபடி இருந்தார்கள்.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    இந்த வீடியோ எந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது தற்போது வரை தெரியவில்லை இருப்பினும் ஆண்கள்தான் மதுபோதையில் கெட்டு சீரழிகிறார்கள் என்றால் பெண்களும் டாஸ்மாக் வரத்தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+