TASMAC: ’பாட்டிலுக்கு 10 ரூபாய்’ வசூல் இல்லை.. ஆட்சி மாறியதும் காட்சி மாறிடுச்சு! மதுப்பிரியர்கள் உற்சாகம்
சென்னை: நீண்ட நாட்களாகவே டாஸ்மாக் மதுபான கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகவும், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக 20 ரூபாயும் வாங்கப்படுவதாக புகார்கள் வந்தபடி இருந்தன. ஆனால் விஜய் முதல்வர் ஆன பிறகு பல மதுபான டாஸ்மாக் கடைகளில் எக்ஸ்ட்ரா பணம் வாங்கப்படவில்லை என மதுப்பிரியர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். முக்கிய நடவடிக்கையாக இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூடவும் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று 50 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்த செய்தியினை பார்த்து பெண்கள் பலரும் உற்சாகமடைந்தனர். விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். அதே நேரத்தில் நேற்று மாலையிலேயே விஜய் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் பரவியது. அப்போது மதுபானக் கடைகளில் கூடுதலாக ரூ.10 வாங்கும் பழக்கமும் இருந்து வருகிறது. அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக நிலவும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது தொடர்பான பிரச்சனையை விஜய் ஆட்சியாலவது சரி செய்யப்படுமா என சில மதுப்பிரியர்கள் கேள்வி கேட்டு ரீஸ்ல் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று பெரும்பாலான கடைகளில் பாட்டிலுக்கு எம்ஆர்பியை தாண்டி கூடுதல் ரூபாய் வசூலிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதாவது வழக்கமாக குவார்ட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்பட்டு வந்ததாகவும், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.20 வரை வாங்கப்பட்டதாகவும் ஆனால் இப்போது இந்த கூடுதல் ரூபாய் இன்றி மதுபானம் வாங்க முடிந்ததாக மதுப்பிரியர்கள் தெரிவித்தனர். அதேசமயம் ஒரு சில மதுபான கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க இன்று பல்வேறு இடங்களில் திடீரென டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் காலையில் மதுவாங்குவதற்காக சென்ற மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். கடை திறக்க நேரம் ஆகிவிட்டதோ என 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்ததாகவும், அதற்கு பிறகே கடை மூடப்பட்டதாக தங்களுக்கு தெரிந்ததாகவும் மதுப்பிரியர்கள் கூறினர்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications