பாட்டிலுக்கு 10 ரூபா..சேல்ஸ்மேனுக்கு கொடுக்காதீங்க! கவர்மெண்ட்கிட்டயே கொடுங்க! டாஸ்மாக் விலையேற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பிறகு டாஸ்மாக் துறையின் மீது ஒரு 'கண்' வைக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, சீருடை என பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், குடிமகன்கள் பாராட்டி வந்தனர். இதற்கிடையே குடிகாரர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பல்வேறு வரிகளை விதித்து மதுபான வகைகளின் விலையை பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

Tasmac Price Hike Liquor

சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.

டாஸ்மாக்

இது பெண்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது டாஸ்மார்க் நிர்வாகம்.

பாட்டிலுக்கு 10 ரூபாய்

தற்போது பாதிக்கு பாதி டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறப்படுவதில்லை. சில டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கூடுதலாக பணம் பெற மாட்டோம் என வெளிப்படையாகவே அறிவித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக சேல்ஸ்மேன்களுக்கு தர வேண்டாம் அரசுக்கு தரலாம் எனும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விலை உயர்வு

அதாவது டாஸ்மாக் மது கடைகளில் மதுபாட்டில்களின் விலை அடுத்த மாதத்தில் இருந்து 10 ரூபாய் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது டாஸ்மாக் மூலம் பெரிய அளவில் வருமானம் தமிழக அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது. பல கடைகள் மூடப்பட்டதால் வருமானத்தில் சற்றே குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கும் ,அவற்றை அப்புறப்படுத்துவதற்கும் போக்குவரத்து செலவினங்கள் ஏற்படுகிறது. இதை அடுத்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வையை 20 ரூபாய் வரை உயர்த்தலாம் என மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

காலிபாட்டில்

அக்டோபர் மாதத்தில் இருந்து மது பாட்டில்களின் விலை 10 ரூபாய் உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது. தற்போது மது பாட்டில்கள் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால், 10 ரூபாய் கூடுதலாக கொடுத்தால் டோக்கன் வழங்கப்படும். அந்த காலிபாட்டிலை திருப்பிக் கொடுத்ததும் 10 ரூபாய் குடிகாரர்களுக்கே வழங்கப்படும்.

டாஸ்மாக் அதிகாரிகள்

தற்போது வரி உயர்வால் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரும். எனவே 180வரை விற்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி 200க்கும், 140 வரை விற்கப்பட்டு வந்த மதுபானங்கள் 160க்கும் விற்கப்பட உள்ளது. மேலும் பிரீமியம் வகை மதுபானங்கள் ஒரு புல்லுக்கு 40 ரூபாய் வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் பீர் வகைகளின் விலையும் 10 ரூபாய் அதிகரிக்கும் என சொல்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள். இதனால் குடிகாரர்கள் சற்றே கலக்கத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+