Tasmac Reopen : மீண்டும் மதுக்கடைகள்.. இன்று எங்கெங்கு திறப்பு.. டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு
சென்னை: அரசு மதுபானக்கடைகள் எங்கெங்கு திறக்கப்படும், எங்கெங்கு திறக்கப்படாது என்பது குறித்து டாஸ்மாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்திற்கு பிறகு நாளை முதல் திறக்கப்பட உள்ளன.

அப்படி திறக்கப்படும் கடைகள் எங்கெல்லாம் திறக்கப்படும், எங்கெல்லாம் திறக்கப்படாது என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், உச்ச நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து மதுபானக்கடைகள் நாளை (16.5.2020) முதல் திறக்கப்படும், பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டது. மேலும் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுபபாட்டுப் பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது.
மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications